ADDED : செப் 27, 2025 11:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை சௌடாம்பிகா கேட்டரிங் கல்லூரி சார்பாக உலக சுற்றுலா தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
புதிய பஸ் ஸ்டாண்டில் துவங்கிய ஊர்வலத்தை டவுன் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் துவக்கி வைத்தார். உலக சுற்றுலா தின பதாகைகளை ஏந்தி மாணவர்கள் வந்தனர்.
முக்கிய வீதிகளின் வழியாக வந்து பழைய பஸ் ஸ்டாண்டில் முடிவடைந்தது.
கல்லூரி முதல்வர் சீனிவாசன், தலைவர் முருகேசன், செயலாளர் வெள்ளைச்சாமி, பொருளாளர் ராஜேந்திரன் மற்றும் கல்லூரி நிர்வாகிகள், மாணவர்கள் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.---