ADDED : நவ 20, 2026 08:50 PM
அ நிறம் | அளவு
சாத்துார்: ஆலங்குளத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியலில் சேர்த்தல் ,திருத்தல் சிறப்பு முகாம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
தாசில்தார் ஆனந்தராஜ் கொடியசைத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தார். துணை தாசில்தார் பால்ராஜ், தலைமை ஆசிரியர் ராஜேஷ் கண்ணன், வருவாய் ஆய்வாளர் ராஜா,வி.ஏ.ஓ ஜெயலட்சுமி மற்றும் ஆலங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
