ADDED : செப் 29, 2024 05:30 AM
சிவகாசி : சிவகாசி மெப்கோ ஸ்லெங்க் பொறியியல் கல்லுாரி இன்டெர்னல் கம்பளைண்ட் கமிட்டி, இந்திய தொழில் நுட்ப கல்வி கழக ஆசிரியர் அமைப்பு சார்பில் பெண்களுக்கு நிகழும் பாலியல் ரீதியான துன்புறுத்தல் தொடர்பாக புகார் அளிக்கவும் அது குறித்த அரசியலமைப்பு சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தவும் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
கல்லுாரி முதல்வர் அறிவழகன் தலைமை வகித்தார். மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் கங்கா விஜயராகவன், பெண்களுக்கு நிகழும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு தீர்வாக அமையும் சட்ட நுணுக்கங்கள் பற்றி பேசினார்.
கல்லுாரி ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாதவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை இன்டெர்னல் கம்பளைண்ட் கமிட்டி தலைமை அதிகாரி கோல்டா ஜெயசீலி, இந்திய தொழில் நுட்ப கல்விக் கழக ஆசிரியர் அமைப்பு தலைவர் முரளிதரன், செயலாளர் கனகராஜ் செய்தனர்.