ADDED : நவ 06, 2024 06:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி: மல்லாங்கிணரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், லயன்ஸ் கிளப் ஆப் காரியாபட்டி பெர்பெக்ட் சார்பில் சர்க்கரை நோய் விழிப்புணர்வு கருத்தரங்கு, தலைவர் அழகர்சாமி தலைமையில் நடந்தது.
வட்டார விரிவாக்க மருத்துவ அலுவலர் வேல் விக்னேஷ் சர்க்கரை நோய் குறித்து கர்ப்பிணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
கர்ப்பிணிகளுக்கு சத்துணவு பெட்டகம் வழங்கப்பட்டது. நிர்வாக இயக்குனர்கள் சிவக்குமார், திருநாவுக்கரசு, முனீஸ்வரன், பிரின்ஸ் உட்பட, ஏராளமான கர்ப்பிணிகள் கலந்து கொண்டனர்.