ADDED : ஏப் 18, 2025 05:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் காமராஜ் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில் பெண்களுக்கான கருத்தரங்கு நடந்தது. கல்லுாரிச் செயலாளர் தர்மராஜன் வரவேற்றார்.
மாவட்ட சமூக நல அலுவலர் ஷீலா சுந்தரி பேசுகையில், மனிதர்களை விட திறன்பேசிகளால் அதிக பிரச்னைகள் ஏற்படுகின்றன. அறிவின் துணையுடன் திறன்பேசியை முறையாக பயன்படுத்த வேண்டும்'' என்றார்.
கலெக்டர் ஜெயசீலன் பேசுகையில், தோற்றம், நடத்தை, குணாதிசயம் ஆகியவை தான் ஒருவர் யார் என்பதை உலகிற்கு வெளிப்படுத்தும்'' என்றார். வழக்கறிஞர் ராஜா, மாவட்ட சுகாதாரத் துறை அலுவலக தேசிய வளர் இளம் பருவத்தினருக்கான நலத்திட்ட ஒருங்கிணைப்பாளர் உதயசங்கரி, மாவட்ட தொழிலாளர், திறன்மேம்பாட்டுத்துறை துணை ஆய்வாளர் மணிகண்டன் பேசினர்.

