ADDED : ஜூன் 08, 2025 11:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் உணவு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு உணவு வணிகர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் தலைமை வகித்தார். வடை, பஜ்ஜி, நொறுக்கு தீனிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை பூச்சிகள் மொய்க்காதவாறு துாசி படியாதவாறு கண்ணாடி பெட்டியில் வைத்து விற்பனை செய்ய வேண்டும். உணவு எண்ணெய்யை ஒரு முறைக்கு மேல் மீண்டும் சூடுபடுத்தி பயன்படுத்தக் கூடாது.
அச்சிட்ட காகிதங்களில், பிளாஸ்டிக் தாள்களிலும் உணவு பரிமாற கூடாது என அறிவுறுத்தினார். நரிக்குடி ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் வீரமுத்து, விருதுநகர் நகராட்சி உணவு பாதுகாப்பு ஜோதிபாசு, சிவகாசி உணவு பாதுகாப்பு ரகுநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.