ADDED : மார் 17, 2024 12:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் லோக்சபா தேர்தலில் நுாறு சதவிகித ஓட்டுப்பதிவு நடைபெறுவதை வலியுறுத்தி வாக்காளர்கள் விழிப்புணர்வு வாக்கத்தான் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது.
இந்த வாக்கத்தான் விருதுநகர் கே.வி.எஸ்., மேல்நிலைப்பள்ளியில் துவங்கி தேசபந்து மைதானம் வழியாக பழைய பஸ் ஸ்டாண்ட் சென்று மீண்டும் கே.வி.எஸ்., மேல்நிலைப்பள்ளிக்கு வந்து நிறைவடைந்தது.

