ADDED : மார் 17, 2024 11:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி : சிவகாசி எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரி, ஜே.சி.ஐ., சிவகாசி சார்பில் ஓட்டளிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு நடை பயணம் நடந்தது.
அசோகன் எம்.எல்.ஏ.,  ஜே.சி., மண்டல தலைவர்  ஷிபி தலைமை வைத்து துவக்கி வைத்தனர். கல்லுாரி முதல்வர் சுதா பெரிய தாய் வரவேற்றார். விழிப்புணர்வு நடை பயணம்  கல்லுாரியில் துவங்கி ரத வீதிகளை சுற்றி மீண்டும் கல்லுாரியில் முடிவடைந்தது. அஞ்சாதேவி, கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் விஜயகுமாரி  கலந்து கொண்டனர்.  ஜே.சி.ஐ., சிவகாசி தலைவர் அருள் மொழி வர்மன் நன்றி கூறினார்.

