ADDED : நவ 17, 2025 02:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: மத்திய இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சகம் சார்பில் சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று விருதுநகரில் மேரே யுவா பாரத் கேந்திரா சார்பில் ஏ.ஏ.ஏ., பொறியியல் கல்லுாரியில் விழிப்புணர்வு நடைப்பயணம் நடந்தது.
மாவட்ட இளைஞர் அலுவலர் ஞானச்சந்திரன் வரவேற்றார். சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் உருவப்படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மை பாரத் கேந்திராவின் முன்னாள் மாநில இயக்குனர் சடாச்சரவேல் உறுதிமொழி ஏற்று, கொடியசைத்து துவக்கி வைத்தார்.கல்லுாரி முதல்வர் சேகர், மாவட்ட விளையாட்டு அலுவலர் குமர மணிமாறன் பங்கேற்றனர்.நடைப்பயணம் கல்லுாரியில் துவங்கி 8 கி.மீ., துாரம் ஆமத்தூர் பஸ் ஸ்டாப்பில் முடிந்தது.

