/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தண்ணீரின்றி வறண்ட அய்யனார் கோயில் ஆறு சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
/
தண்ணீரின்றி வறண்ட அய்யனார் கோயில் ஆறு சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
தண்ணீரின்றி வறண்ட அய்யனார் கோயில் ஆறு சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
தண்ணீரின்றி வறண்ட அய்யனார் கோயில் ஆறு சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
ADDED : அக் 01, 2025 12:09 AM

ராஜபாளையம் : ராஜபாளையம் நகரின் நீர் ஆதாரம், சுற்றுலாவிற்கு முக்கிய காரணமாக விளங்கும் அய்யனார் கோவில் ஆறு மழை இன்றி வறட்சியின் காரணமாக பாறைகளுடன் காட்சியளிக்கிறது. சுற்றுலா பயணிகள் ஆற்றிற்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
ராஜபாளையம் நகராட்சி 42 வார்டுகளுடன் 1.30 லட்சம் மக்களுடன் மாவட்டத்திலேயே பெரிய நகராட்சியாக இருந்து வருகிறது. நகர் பகுதி மக்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் அய்யனார் கோயில் ஆறு இருந்து வருகிறது. மழைக்காலங்களில் வரும் ஆற்று நீரை ஆறாவது மயில் நீர் தேக்கத்தில் சேகரித்து சுத்திகரித்து விநியோகிக்கப்பட்டு வருகிறது.
கடந்த இரண்டு மாதத்திற்கும் மேல் சுட்டெரிக்கும் கடும் வெயில் காரணமாக நீர்த்தேக்கம் வற்றியதுடன் அய்யனார் கோயில் ஆறு வறண்டு பாறைகளுடன் காட்சியளிக்கிறது. சுற்றுப்பகுதி மக்களுக்கு பொழுதுபோக்கிற்கு முக்கிய பங்கு வகிக்கும் அய்யனார் கோயில் ஆறு தற்போது காலாண்டு தேர்வு விடுமுறை தொடங்கியுள்ளதால் குடும்பத்துடன் வந்து ஏமாற்றுத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
மழையின் அறிகுறி மட்டும் இருந்து வறண்ட காற்று வீசி வருவதால் வனப்பகுதியில் உள்ள விலங்குகளுக்கும், கால்நடைகளுக்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் இப்பகுதி கால்நடை வளர்ப்போர், விவசாயிகள் மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.