ADDED : அக் 01, 2025 12:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகர் வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரியில் இளங்கலை தமிழ்த்துறை சார்பில் சென்னை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்துடன் இணைந்து சங்க இலக்கியத்தில் பண்பாடு என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.
கல்லுாரி முதல்வர் சிந்தனா குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சி துவக்கினார். தமிழ்த்துறை தலைவர் விந்தியகவுரி வரவேற்றார். கல்லுாரி பொருளாளர் சந்திரசேகரன், சென்னை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் முதுநிலை விற்பனை சீரமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி பேசினார். அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி இணை பேராசிரியர் முத்தமிழ்ச்செல்வன், மதுரை காமராஜர் பல்கலை பேராசிரியர் கலையரசி பேசினர்.
தியாகராஜர் கல்லுாரி பேராசிரியர் சரவணஜோதிபேசினார். உதவி பேராசிரியர் யோகம் நன்றி கூறினார்.