ADDED : டிச 16, 2024 04:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம் : ராஜபாளையம் வில்லாளி வீரன் ஐயப்ப பக்த பஜனை சேவா சங்கம் சார்பில் ஐயப்ப சுவாமி வீதி உலா நடந்தது.
ராஜபாளையம் முடங்கியார் ரோட்டில் சித்தி விநாயகர் கோயிலில் வில்லாளி வீரன் ஐயப்ப பக்த பஜனை சேவா சங்கம் சார்பில் மூன்று நாட்கள் விழா நடந்தது. வெள்ளிக்கிழமை 108 விளக்கு பூஜை, சனிக்கிழமை காலை ஐயப்ப சுவாமிக்கு அபிஷேகங்கள் அதனை தொடர்ந்து கன்னி பூஜை நாம சங்கீர்த்தன பஜனை நடந்தது.
இதை தொடர்ந்து சுவாமி வீதி உலா நடந்தது. முக்கிய வீதிகளான பழைய பஸ் ஸ்டாண்ட், சங்கரன்கோவில் முக்கு, தென்காசி ரோடு வழியே கோயிலுக்கு வந்தடைந்தது.

