ADDED : செப் 14, 2025 03:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி:காரியாபட்டி தர்மாபுரத்தில் பயணியர் நிழற்குடை, பாப்பனம், சூரனூரில் கண்மாய் தூர் வாரும் பணி, பி.புதுப் பட்டியில் தடுப்பணை கட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து நரிக்குடி எழுவணிக்கு புதிய பேருந்து வழித்தடத்தை துவக்கி வைத்து, கிழவிகுளத்தில் கலையரங்க கட்டடத்தை திறந்து வைத்தார். நரிக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியினை பார்வையிட்டார்.