ADDED : நவ 21, 2025 04:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்: ராஜபாளையம் ரெப்கோ வங்கி 57 ம் ஆண்டு விழாவை முன்னிட்டு வாடிக்கையாளர்கள் உடனான சிறப்பு சந்திப்பு கூட்டம் வர்த்தக சங்க மையத்தில் நடந்தது.
சங்க செயலாளர் வெங்கடேஸ்வர ராஜா, மூதூர் நல சங்க தலைவர் பெத்து ராஜா, வழக்கறிஞர் சந்திரசேகரன், நகைச்சுவை மன்ற செயலாளர் சுப்பிரமணியன் மற்றும் வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.
வங்கி முதன்மை மேலாளர் பிரகாஷ் குமார் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சேமிப்பு திட்டங்கள் குறித்தும், கடன் பரிசீலனை முறையை எளிமைப்படுத்தியது பற்றியும் விளக்கினார். உதவி மேலாளர் கங்கா பிரியதர்ஷினி நன்றி கூறினார்.

