/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவில் தனி எக்கோ பரிசோதனை கர்ப்பிணிகளுக்காக துவக்கம்

ADDED : நவ 21, 2025 04:49 AM
விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில் பரிசோதனைக்கு வரும் கர்ப்பிணிகளின் நலனிற்காக தனியாக எக்கோ பரிசோதனை மையம், டெக்னீசியன் நியமித்து மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையின் மகப்பேறு பிரிவிற்கு தினசரி 30 முதல் 40 கர்ப்பிணிகள் இருதய பரிசோதனைகள் எடுப்பதற்காக வருகின்றனர். இவர்களுக்கு இதுவரை அரசு மருத்துவமனையின் முதல் தளத்தில் எக்கோ பரிசோதனை எடுக்கப்பட்டது.
ஆனால் வெளி, உள்நோயாளிகளுக்கும் இதே இடத்தில் எக்கோ பரிசோதனை எடுப்பதால் எப்போதும் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. இதனால் பரிசோதனைக்காக வரும் கர்ப்பிணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உருவானது.
இதையடுத்து மகப்பேறு பிரிவில் தேசிய சுகாதார இயக்கம் திட்டத்தில் எக்கோ டெக்னீசியன் பணியிடத்திற்கு ஒரு டெக்னீசியன் நியமிக்கப்பட்டார். தற்போது மகப்பேறு பிரிவில் தனியாக எக்கோ பரிசோதனை அறை உருவாக்கப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இங்கு கர்ப்பிணிகளுக்கு மட்டும் பரிசோதனை எடுக்கப்படுவதால் காத்திருப்புக்கான நேரம் குறைந்து சிரமமின்றி வந்து செல்ல மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.