ADDED : ஆக 12, 2025 06:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகரில் ஐ.டி.பி.ஐ., வங்கியின் அகில இந்திய வேலை நிறுத்தம், தனியார்மய முயற்சியை கண்டித்து அகில இந்திய வங்கி அலுவலர்கள், ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அகில இந்திய வங்கி அலுவலர் சங்கம் பொறுப்பாளர் உமா தலைமை வகித்தார். அகில இந்திய வங்கி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வெங்கடேஷ், அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் மாவட்ட தலைவர் மாரிக்கனி, இன்சூரன்ஸ் ஊழியர் சங்க பொறுப்பாளர் உமேஷ் பேசினர். அகில வங்கி ஊழியர் சங்க செயற்பாட்டாளர் நாராயணசாமி நன்றி கூறினார்.