/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பெருமாள் கோயிலில் உண்டியல் திறப்பு
/
பெருமாள் கோயிலில் உண்டியல் திறப்பு
ADDED : அக் 22, 2024 04:27 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி ஐந்து சனிக்கிழமை உற்ஸவம் முடிந்த நிலையில், இதுவரை மொத்தம் ரூ.30 லட்சம் உண்டியல் காணிக்கையாக வரப்பட்டுள்ளது.
இக்கோயிலில் புரட்டாசி சனி உற்ஸவம் செப். 21 முதல் துவங்கி அக். 19 வரை நடந்தது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல லட்சம் மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஒவ்வொரு சனிக்கிழமை உற்ஸவம் முடிந்த நிலையில் மறுநாள் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டது. கடைசி சனி உற்ஸவம் முடிந்த நிலையில் நேற்று கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் என்னும் பணி செயல் அலுவலர் சக்கரை அம்மாள் தலைமையில் நடந்தது. இதில் ரூ. 2.85 லட்சம் காணிக்கையாக வரப்பட்டிருந்தது. புரட்டாசி ஐந்து சனிக்கிழமைகளும் சேர்த்து மொத்தம் ரூ. 30 லட்சம் வரை உண்டியல் காணிக்கை வந்ததாக அறநிலையத்துறையினர் தெரிவித்தனர்.

