/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பேனர் / விரக்தி * அரசு மருத்துவமனை ஆய்வக ஊழியர்கள் * இரண்டு மாதமாக சம்பளம் கிடைக்காததால்
/
பேனர் / விரக்தி * அரசு மருத்துவமனை ஆய்வக ஊழியர்கள் * இரண்டு மாதமாக சம்பளம் கிடைக்காததால்
பேனர் / விரக்தி * அரசு மருத்துவமனை ஆய்வக ஊழியர்கள் * இரண்டு மாதமாக சம்பளம் கிடைக்காததால்
பேனர் / விரக்தி * அரசு மருத்துவமனை ஆய்வக ஊழியர்கள் * இரண்டு மாதமாக சம்பளம் கிடைக்காததால்
ADDED : ஜன 18, 2024 05:29 AM
விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் ஆய்வகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, இரண்டு மாதமாக சம்பளம் வழங்காததால் விரக்தியுடன் பணிபுரிந்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் புதியதாக அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை 2022 ஜன. 12 ல் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு வரக்கூடிய நோயாளிகளை பரிசோதனை செய்து அதற்கு தகுந்தாற் போல சிகிச்சை மேற்கொள்வதற்காகவும், மருத்துவக்கல்லுாரியில் மாணவர்களின் படிப்பிற்காகவும் மருத்துவ ஆய்வகம், ரத்த அணு பரிசோதனை மையம், உயிரணு, உயிர் வேதியியல் ஆய்வகம், திசுத்துயறியல் சேகரிப்பு, பொது மாதிரி சேகரிப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதன் மூலம் பரிசோதனைகள் செய்யப்பட்டு நோயாளிகள் தொடர் சிகிச்சை பெற்று குணமடைய முடிகிறது. மாணவர்களின் படிப்பிற்கு தேவையான ஆய்வுகளையும் பெற முடிகிறது.
இந்த ஆய்வகம், மையங்களில் பணிபுரிவதற்காக அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைக்காக தேசிய சுகாதார இயக்கம் திட்டத்தில் 2022 ல் 27 பேர், 2023 ல் 12 பேர் என மொத்தம் 39 தேர்வு செய்யப்பட்டு ரூ. 15 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு வாரவிடுமுறை மட்டுமே வழங்கப்படுகிறது. இரண்டு ஆண்டுகளை கடந்து பணியாற்றுபவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை.
இந்நிலையில் தேசிய சுகாதார இயக்கம் திட்டத்தில் 2022 ல் பணியில் சேர்ந்த 27 ஆய்வக ஊழியர்களுக்கு இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. ஆனால் 2023 ல் பணியில் சேர்ந்த 12 பேருக்கு சம்பளம் சரியாக வழங்கப்படுகிறது. தங்களுக்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு மாதம் தவறாமல் ஊதியம் வழங்கும் அரசாங்கம், துவக்கத்தில் இருந்து பணியாற்றும் தங்களை வஞ்சிப்பதாக ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து ஊழியர்கள் கூறுகையில், மத்திய அரசின் திட்டம் என்பதால் பின்னாளில் பணிநிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்டவை கிடைக்கும் என எண்ணி பணியில் சேர்ந்தோம். ஆனால் பணிநிரந்தரம் கிடையாது என்பது தெரிந்த பின்னரும் குடும்ப சூழ்நிலை காரணமாக தொடர்ந்து பணியாற்றுகிறோம். தேசிய சுகாதார இயக்கம் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கான தொகையை ஆண்டு துவக்கத்தில் விடுவித்து விட்டது. தமிழக அரசாங்கம் அதை வழங்குவதில் வேறுபாடு காட்டி வருகிறது,என்றனர்.
எனவே அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகளில் தேசிய சுகாதார இயக்கம் திட்டத்தில் பணியாற்றுபவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் தமிழக அரசு முரண்பாடு காட்டாமல் வழங்க வேண்டும் என ஊழியர்கள் எதிர்பார்கின்றனர்.