/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
*வெளி மாவட்டத்திற்கு கரும்பு அனுப்புவதால் பாதிப்பு * நிலுவைத் தொகையில் கிடைப்பதில் சிக்கல்
/
*வெளி மாவட்டத்திற்கு கரும்பு அனுப்புவதால் பாதிப்பு * நிலுவைத் தொகையில் கிடைப்பதில் சிக்கல்
*வெளி மாவட்டத்திற்கு கரும்பு அனுப்புவதால் பாதிப்பு * நிலுவைத் தொகையில் கிடைப்பதில் சிக்கல்
*வெளி மாவட்டத்திற்கு கரும்பு அனுப்புவதால் பாதிப்பு * நிலுவைத் தொகையில் கிடைப்பதில் சிக்கல்
ADDED : டிச 21, 2024 05:39 AM
ராஜபாளையம் : அரவை பருவத்திற்கு உள்ளூர் சர்க்கரை ஆலை திறக்கப்படாத நிலையில் வெளி மாவட்டங்களுக்கு கரும்புகளை அனுப்புவதில் இடர்பாடினை சந்திப்பதுடன் நிலுவைத் தொகை கிடைக்காமல் விவசாயிகள் சிக்கலில் உள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் ஒட்டிய பகுதிகளில் நீர் வரத்து காரணமாக நெல் விவசாயத்தை அடுத்து கரும்பு சாகுபடி அதிகம்.
ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு, சிவகிரி தாலுகா, தென்காசி வரை இரண்டு மாவட்ட விவசாயிகள் சுமார் பத்தாயிரம் ஹெக்டேர் கரும்பு விவசாயத்தில் ஈடுபட்டு வந்தனர்.
தென்காசி மாவட்டம் சிவகிரி தனியார் சர்க்கரை ஆலை தொடங்கியதால் கரும்பு விவசாயிகள் ஆலை நிர்வாகத்திற்கு இடையே ஒப்பந்தம் போடப்பட்டு வங்கிகள் மூலம் கடன் பெற்று விவசாயம் நடந்து வந்தது.
இதில் 2018--19 ல் ஆலைக்கு கரும்பு சப்ளை செய்த இரண்டு மாவட்ட கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகை சர்க்கரை ஆலை நிர்வாகம் தற்போது வரை பாதி தொகையான ரூ. 11 கோடி பட்டுவாடா நிலுவையில் வைத்துள்ளது.
இதனால் அடுத்த கட்ட விவசாய பணிகளுக்கான செலவுகளை வங்கி மூலம் பெற முடியாமல் தவித்து வந்தனர்.
கண்மாய் ஒட்டிய ஈர பகுதிகளில் கரும்பு விவசாயத்தை தவிர்த்து மாற்று விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளிட்ட சிக்கல்களால் 5 லட்சம் டன் கரும்பு அரவைக்கு அனுப்பிய நிலை மாறி தற்போது ஒரு லட்சம் மட்டும் தயாராக உள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள தனியார் சர்க்கரை ஆலை இயங்காமல் உள்ளதால் சிவகங்கை, தேனி மாவட்ட சர்க்கரை ஆலைகளுக்கு பல்வேறு சிக்கல்களுக்கு இடையே விவசாயிகள் கரும்பினை அனுப்ப வேண்டியுள்ளது.
வெளி மாவட்டத்திற்கு அனுப்புவதால் வெட்டு கூலி, எடை குறைவால் வாடகை பங்களிப்பு என டன் ஒன்றுக்கு ரூ. 2,500 க்கு பதில் 3,150 செலவு ஏற்படுவதாக கவலை தெரிவித்துள்ளனர்.
நிலுவைத் தொகை குறித்து தொடர்ச்சியாக பல்வேறு கட்ட போராட்டங்களும் கோரிக்கைகள் வைத்தும் முடிவு எட்டப்படாமல் உள்ளது.
இரண்டு மாவட்ட விவசாயிகள் வாழ்வாதாரத்தை காக்கும் விதமாக நிலுவைத் தொகையை விரைந்து பெற்று தருவதுடன் உள்ளூர் சர்க்கரை ஆலை இயக்கும் வழிமுறைகளை தொடங்க முயற்சிக்க வேண்டும் என கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.