அடிப்படை வசதிகள் இல்லாத சமத்துவபுரம். காலி செய்யும் பயனாளிகள்
அடிப்படை வசதிகள் இல்லாத சமத்துவபுரம். காலி செய்யும் பயனாளிகள்
UPDATED : நவ 20, 2026 05:04 PM
ADDED : நவ 20, 2026 05:04 PM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை சமத்துவ புரத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பயனாளிகள் காலி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, செட்டிகுறிச்சி ஊராட்சியத்தை சேர்ந்த அருணாச்சலபுரத்தில் 7 கோடி ரூபாயில் கட்டப்பட்ட 100 சமத்துவபுர வீடுகள் 2023 ல், பயன்பாட்டிற்கு வந்தது. சமத்துவ புரத்தில் ரேஷன் கடை கட்டடம், பூங்கா மற்றும் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டது. ஊராட்சி ஒன்றியம் தொடர்ந்து பராமரிப்பு பணிகள் செய்யாததால் ஒரு ஆண்டு ஆன நிலையில், குடிநீர் பிரச்சனை, அடிக்கடி மின்தடை, குறைந்த அழுத்த மின்சாரம் உள்ளிட்ட பிரச்சனைகளால் பயனாளிகள் தங்கள் வீட்டை மற்றவர்களுக்கு வாடகைக்கு விட்டுவிட்டு வேறு இடத்திற்கு குடி பெயர்ந்து விட்டனர். ஒரு சில பயனாளிகள் மட்டும் வேறு வழியின்றி வீடுகளில் குடியிருந்து வருகின்றனர்
. சுக்கிலநத்தத்தில் இருந்து சமத்துவபுரம் வரையிலான ரோடு மோசமாக உள்ளது. தெரு விளக்குகள் இல்லை. முக்கியமாக பஸ் வசதி இல்லாததால் மக்கள் கடும் அவதிக்கும் உள்ளாகின்றனர். பள்ளி மாணவர்கள் 2 கி.மீ., தூரம் நடந்து செல்ல வேண்டி உள்ளது. இங்கு ரேஷன் கடை செயல்படவில்லை. ஒன்றரை கி.மீ., தூரத்தில் உள்ள செட்டி குறிச்சிக்கு நடந்து சென்று பெண்கள் ரேஷன் பொருட்களை வாங்குகின்றனர்,
பல கோடி செலவழித்து கட்டப்பட்ட சமத்துவபுரம் முறையான பராமரிப்பு , அடிப்படை வசதிகள் இல்லாததால் இங்கு வசிக்கும் மக்கள் காலி செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர்.
ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சமத்துவ புரத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.
