ADDED : அக் 27, 2025 04:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: மதுரை காமராஜ் பல்கலை விளையாட்டு போட்டியில் விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியின் மாணவர்கள் கூடைப்பந்து அணி இறுதி லீக் போட்டியில் 2வது இடத்தை வென்றது. மேலும் மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டியில் 12 அணிகள் பங்கேற்று 2வது இடம் வென்றது.
கல்லுாரியில் நடந்த பரிசளிப்பு விழா தலைவர் சம்பத்குமார் தலைமையில் நடந்தது. உதவி தலைவர்கள் டெய்சிராணி, ராமசாமி, பொருளாளர் குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை காமராஜ் பல்கலை உடற்கல்வி பேராசிரியர் சுகுமார் நன்றி கூறினார்.

