/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பாதுகாப்பின்றி மழை, வெயிலில் பேட்டரி வாகனங்கள் -ஊராட்சிகளுக்கு வழங்க எதிர்பார்ப்பு
/
பாதுகாப்பின்றி மழை, வெயிலில் பேட்டரி வாகனங்கள் -ஊராட்சிகளுக்கு வழங்க எதிர்பார்ப்பு
பாதுகாப்பின்றி மழை, வெயிலில் பேட்டரி வாகனங்கள் -ஊராட்சிகளுக்கு வழங்க எதிர்பார்ப்பு
பாதுகாப்பின்றி மழை, வெயிலில் பேட்டரி வாகனங்கள் -ஊராட்சிகளுக்கு வழங்க எதிர்பார்ப்பு
ADDED : மார் 24, 2025 06:22 AM

ராஜபாளையம்: ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதிய பேட்டரி வாகனங்களை திறந்த வெளியில் பாதுகாப்பின்றி மழை, வெயிலில் நிறுத்தப்பட்டுள்ளதை விரைவில் ஊராட்சிகளுக்கு வழங்க மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மத்திய அரசின் துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு குப்பைகளை சேகரிக்க பேட்டரி வாகனங்கள் மத்திய அரசால் வழங்கப்படுகிறது. திட்டத்தின் கீழ் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 36 ஊராட்சிகளில் குடியிருப்புகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொண்டு செல்ல ரூ.1.59 கோடி மதிப்பில் 62 பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த வாகனங்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சிகளுக்கு வழங்குவதற்காக ஒன்றிய அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கட்டுமான பணிகள் முடிவடையாத நிலையில் பேட்டரி வாகனங்களும் தகுந்த பாதுகாப்பின்றி வெயில், மழையில் திறந்தவெளியில் நிறுத்தப்பட்டுள்ளது.
ஊராட்சிகளில் குப்பை சேகரிக்கும் வாகனங்கள் பற்றாக்குறையால் துாய்மை பணிகள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் ஒதுக்கப்பட்ட பேட்டரி வாகனங்களை அந்தந்த ஊராட்சிகளுக்கு ஒப்படைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
வசந்தகுமார், பி.டி.ஓ.,: புதிய பேட்டரி பொருத்தும் பணியுடன் ஆர்.டி.ஓ.,விடம் சான்று பெற வேண்டி உள்ளது. தகுந்த இடம் இல்லாததால் திறந்து வெளியில் நிறுத்த வேண்டியதாகி விட்டது. விரைவில் வாகனங்கள் ஊராட்சிகளுக்கு ஒப்படைக்கப்படும்.