/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தொடர்மழையில் களை இழந்த பஜார் வியாபாரிகள் 'அப்செட்'
/
தொடர்மழையில் களை இழந்த பஜார் வியாபாரிகள் 'அப்செட்'
தொடர்மழையில் களை இழந்த பஜார் வியாபாரிகள் 'அப்செட்'
தொடர்மழையில் களை இழந்த பஜார் வியாபாரிகள் 'அப்செட்'
ADDED : அக் 16, 2025 11:51 PM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் நேற்று தொடர் மழை பெய்ததால் களை கட்டி இருந்த தீபாவளி பஜார் நேற்று ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டதால் வியாபாரிகள் 'அப்செட்' ல் உள்ளனர்.
வடகிழக்கு பருவ மழை துவங்கிய நிலையில், அருப்புக்கோட்டையில் நேற்று காலை 5:00 மணியிலிருந்து மழை பெய்ய துவங்கியது.
அண்ணாதுரை சிலை பகுதி, மெயின் பஜார், திருச்சுழி ரோடு ஆகிய பகுதிகளில் ரோட்டின் இரு புறங்களிலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 3 நாட்களுக்கு முன்பு இருந்தே ஜவுளிகள், பேன்சி கடைகள், செருப்பு கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் போடப்பட்டு விற்பனைக்கு தயாராக இருந்தன. நேற்று முன் தினத்திலிருந்து களைகட்டிய பஜார் நேற்று காலை தொடர் மழை பெய்ததால் வெறிச்சோடி காணப் பட்டது.
அருப்புக்கோட்டைக்கு நூற்றுக்கும் மேற்பட்ட கிராம பகுதியில் இருந்து மக்கள் ஜவுளிகள் மற்றும் பண்டிகை பொருட்களை வாங்க வருவர்.
தொடர் மழையால் மக்கள் வருகை குறைந்து போனது. பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் மழையால் பஜார் வியாபாரம் குறைந்து போனதால் வியாபாரிகள் சோகத்தில் உள்ளனர்.