/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தோணுகால் சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

ADDED : அக் 16, 2025 11:52 PM

காரியாபட்டி: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தோணுகால் சந்தையில் ஆடுகள் ரூ. 3 கோடி வரை விற்பனையானது. விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
காரியாபட்டி தோணுகாலில் வாரம் தோறும் வியாழக்கிழமை சந்தை நடைபெறும். நேற்று நடந்த சந்தையில் தீபாவளியை முன்னிட்டு காரியாபட்டி, அருப்புக்கோட்டை, மதுரை, கமுதி, விருதுநகர், ஆவியூர், திருமங்கலம், நரிக்குடி, திருச்சுழி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஆடுகள் வாங்க வந்தனர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்தன, ஆடுகளின் எடையை பொறுத்து ரூ. 10, 15, 25 ஆயிரம் வரை விற்பனையானது. சென்ற மாதம் ஆடு உயிருடன் எடை போட்டு, கிலோ ரூ. 800 க்கு விற்கப்பட்டது. நேற்று ரூ. ஆயிரத்திற்கு விற்கப்பட்டது. கூட்டம் களை கட்டியதால், விற்பனை படுஜோராக இருந்தது. விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். ரூ. 3 கோடி வரை விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.