/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இணைய வழி பயன்பாட்டில் விழிப்புணர்வு வேண்டும்; மாணவர்களுக்கு எஸ்.பி., அறிவுரை

ADDED : நவ 30, 2024 05:58 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்; விருதுநகர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் சார்பில் சர்வதேச இணைய வழி பாதுகாப்பு நாளை முன்னிட்டு விழிப்புணர்வு கருத்தரங்கு கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலையில் நடந்தது.
வேந்தர் ஸ்ரீதரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சசி ஆனந்த் முன்னிலை வகித்தார். இன்ஸ்பெக்டர் மீனா வரவேற்றார்.
விருதுநகர் எஸ்.பி., கண்ணன் பேசுகையில் , மாணவர்கள் இருசக்கர பயணத்தில் ஹெல்மெட் அணிதலை கடைபிடிக்க வேண்டும். போதை பொருட்கள் பழக்கத்திற்கு ஆளாகாமல் தவிர்ப்பது நல்லது. சைபர் கிரைமில் ஏமாற்றாமலும், ஏமாறாமலும் இருத்தல் மிகவும் அவசியம். இணைய வழி பயன்பாட்டில் மாணவர்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அதில் ஏற்படும் கவனக்குறைவே பண இழப்பிற்கு காரணமாகும் என்றார்
கருத்தரங்கில் பதிவாளர் வாசுதேவன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசோகன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம், சைபர் கிரைம் போலீசார், மாணவர்கள் பங்கேற்றனர்.