sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

தின்பண்டங்களில் செயற்கை வண்ணங்கள் உஷார்; பாதிப்புக்குள்ளாகும் குழந்தைகள், இளைஞர்கள்

/

தின்பண்டங்களில் செயற்கை வண்ணங்கள் உஷார்; பாதிப்புக்குள்ளாகும் குழந்தைகள், இளைஞர்கள்

தின்பண்டங்களில் செயற்கை வண்ணங்கள் உஷார்; பாதிப்புக்குள்ளாகும் குழந்தைகள், இளைஞர்கள்

தின்பண்டங்களில் செயற்கை வண்ணங்கள் உஷார்; பாதிப்புக்குள்ளாகும் குழந்தைகள், இளைஞர்கள்


ADDED : ஜன 27, 2025 06:46 AM

Google News

ADDED : ஜன 27, 2025 06:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவிழா காலங்களில் குழந்தைகளை கவரும் வகையில் பஞ்சுமிட்டாய், ரோஸ் மில்க், ஐஸ்கிரீம், கலர் மிட்டாய், சர்பத் உள்ளிட்ட பானங்களில் வண்ண நிறங்கள் சேர்க்கப்படுகின்றன. ரோட்டோர கடைகள், ஓட்டல்களில் அனுமதிக்க படாத, பயன்படுத்தக் கூடாத செயற்கை வண்ணங்களை சேர்க்கின்றனர்.

இதில் சில தள்ளுவண்டி கடைகளில் விற்கும் ஐஸ்கிரீம்கள் தரமற்றதாக விற்கப்படுகிறது. குழந்தைகள் அடம்பிடித்து வாங்கி சாப்பிடுகின்றனர்.

இளைஞர்களையும் கவரும் வகையில் உணவு பொருட்களில் வண்ண நிறங்களை சேர்த்து கொடுக்கின்றனர். உணவு பாதுகாப்பு துறை செயற்கை வண்ணங்கள் சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரித்து விற்பனை செய்வதை கண்டும் காணாமல் விட்டு விடுகின்றனர். குழந்தைகள், சிறுவர்கள் மனதை கவரும் வகையில் அதிக அளவில் செயற்கை வண்ண மூட்டப்பட்ட பஞ்சு மிட்டாய்கள் விற்படுகின்றன.

இனிப்பு, கார வகைகள், ஐஸ்கிரீம், குளிர்பானங்கள், கேக்கு வகைகள் போன்ற உணவுகளிலும் கலக்கப்படுகின்றன. இவ்வாறு கலக்கப்பட்ட உணவுகளை உட்கொள்வதால் வயிற்று உபாதைகள், அஜீரண கோளாறுகள், கல்லீரல், சிறுநீரக பிரச்னை, புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இதுபோன்ற அனுமதி இல்லாத செயற்கை வண்ண மூட்டப்பட்ட உணவு பொருட்களை வாங்குவதை மக்கள் தவிர்க்க வேண்டும். செயற்கை வண்ண மூட்டப்பட்ட உணவுப் பொருட்களை ஆய்வு செய்து உணவகங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். சாக்லேட், பிஸ்கட், இனிப்பு, காரம், சிக்கன் மசாலா, டீத்தூள் போன்றவை அடங்கும். உணவுப் பொருட்களை தயாரித்து விற்பவர்கள் மீது வழக்கு பதிந்து, சிறை தண்டனை, அபராதம் விதிக்க வேண்டும்.

அனுமதி இல்லாத செயற்கை வண்ணங்கள் சேர்க்கப்பட்ட உணவு பொருட்கள், கலப்படம் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க அதிகாரிகளிடத்தில் மக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும். மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கண்காணித்து தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us