/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
முடுக்கன்குளம் துணை மின் நிலையத்திற்கு பூமி பூஜை
/
முடுக்கன்குளம் துணை மின் நிலையத்திற்கு பூமி பூஜை
ADDED : அக் 27, 2024 03:41 AM
காரியாபட்டி : காரியாபட்டி முடுக்கன்குளத்தில் துணை மின் நிலையம் அமைக்க பூமி பூஜை நடந்தது.
காரியாபட்டி முடுக்கன்குளத்தில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வந்தது. இதைடுத்து இடம் தேர்வு செய்யப்பட்டு, ரூ.32 கோடியே 11 லட்சத்து 73 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு, நேற்று பூமி பூஜை நடந்தது. அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அமைச்சர் தங்கம் தென்னரசு துவக்கி வைத்து பேசியதாவது: முடுக்கன்குளம் பகுதியில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. குறைந்த அழுத்த மின்சாரம் இருந்து வந்தது. இயற்கை பேரிடர் காலங்களில் மின்சாரம் சப்ளை செய்ய முடியாத நிலை இருந்தது. இங்கு துணை மின் நிலையம் அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மின்சாரத்துறை, நிதித்துறைக்கு அமைச்சராக பொறுப்பு வகித்ததால் இத்திட்டத்திற்கு தேவையான நிதியை ஒதுக்க முடிந்தது.
தடையில்லா மின்சாரம், சீரான மின்சாரம் கிடைக்க 11 கேவி கொண்ட துணை மின் நிலையம் அமைய உள்ளது. ஏராளமான வசதிகள் செய்யப்பட உள்ளன. புதிய வழித்தடங்கள் ஏற்படுத்தி, மற்ற பகுதிகளில் மின்தடை ஏற்பட்டாலும் இங்கிருந்து உடனடியாக மின்சாரம் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது, என்றார்.
கலெக்டர் ஜெசீலன், திருநெல்வேலி தலைமை பொறியாளர் செல்வராஜ், மேற்பார்வை பொறியாளர் லதா, காரியாபட்டி செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.