/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகர் அரசு மருத்துவமனையில் உயிர்வேதியியல் பகுப்பாய்வு மிஷின் இனி ஒரு மணி நேரத்தில் 600 பரிசோதனைகள்

ADDED : ஆக 14, 2025 02:23 AM
விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவக் கல்லுாரி, மருத்துவமனைக்கு புதிதாக மூன்று உயிர்வேதியில் பகுப்பாய்வு மிஷின்கள் வழங்கப்பட்டுள்ளது. இனி ஒரு மணி நேரத்தில் 600 பரி சோதனைகள் செய்து முடிவுகளை பெற முடியும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விருதுநகர் அரசு மருத்துவக் கல்லுாரி, மருத்துவமனைக்கு தினமும் 2 ஆயிரத்திற்கும் அதிகமான வெளிநோயாளிகள் பரிசோதனை, சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். தனியார் மருத்துவமனையில் பரிசோதனை, சிகிச்சைக்கு அதிக செலவு ஆவதால் அரசு மருத்துவமனையை நாடு வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனால் அதிகரித்து வரும் நோயாளிகளின் வருகைக்கு ஏற்ப பரிசோதனைகளை விரைந்து முடித்து முடிவுகளை வழங்கக்கூடிய மிஷின்களின் தேவை ஏற்பட்டது. இதை யடுத்து விருதுநகர் அரசு மருத்துவ மனைக்கு சி.எஸ்.ஆர்., நிதியில் புதிதாக ரூ. 17 லட்சத்தில் மூன்று முழு தானியங்கி உயிர்வேதியியல் பகுப்பாய்வு மிஷின்கள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த மிஷின்களால் இதயம், நீரிழிவு, சிறுநீரகம், கல்லீரல், கணையம் உள்பட பல்வேறு நோய்களுக்கான பரிசோதனைகளை ஒரு மணி நேரத்தில் 600 என பகுப்பாய்வு செய்து துல்லியமான முடிவுகளை பெற முடியும்.
இந்த மிஷின்கள் கலெக்டர் சுகபுத்ரா தலைமையில் டீன் ஜெயசிங் முன்னிலையில் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இதில் ஓ.என்.ஜி.சி., பொது மேலாளர் ராமசுவாமி, உயிர்வேதியியல் துறை தலைவர் ரேகா, மருத்துவகண்காணிப்பாளர் அமலன், துணை மருத்துவக்கண்காணிப்பாளர் அன்புவேல், ஆர்.எம்.ஓ., கணேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.