/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கோயில் அருகில் டாஸ்மாக் கடை அகற்ற பா.ஜ., வலியுறுத்தல்
/
கோயில் அருகில் டாஸ்மாக் கடை அகற்ற பா.ஜ., வலியுறுத்தல்
கோயில் அருகில் டாஸ்மாக் கடை அகற்ற பா.ஜ., வலியுறுத்தல்
கோயில் அருகில் டாஸ்மாக் கடை அகற்ற பா.ஜ., வலியுறுத்தல்
ADDED : ஜூலை 22, 2025 03:16 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை கோயில் அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பா.ஜ., வினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
அருப்புக்கோட்டை அமுதலிங்கேஸ்வரர் கோயில் அருகில் டாஸ்மாக் கடை உள்ளது. மதுரை மெயின் ரோடு அருகில் உள்ளதால் இந்த வழியாக செல்லும் ஆயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள், மக்கள் அவதிபடுகின்றனர். குடிமகன்கள் குடித்துவிட்டு ரோட்டில் தள்ளாடுவதால் பயந்து கொண்டே செல்ல வேண்டி உள்ளது.
இந்த டாஸ்மாக் கடையை அகற்றக் கோரியும், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் குடிநீர், வாறுகால், ரோடு, உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர கோரியும் மாவட்ட கலெக்டர், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ., ஆகியோரிடம் ஒன்றிய பா.ஜ., சார்பாக மனு கொடுக்கப்பட்டது. ஒன்றிய தலைவர் நாகராஜன் தலைமையில் மண்டல பொதுச்செயலாளர் ஆனந்தராஜ் மற்றும் நிர்வாகிகள் மனு கொடுத்தனர்.