ADDED : ஜன 14, 2025 04:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி ஒன்றியத்தில் பா.ஜ., கட்சியில் புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. மாவட்டத் தலைவர் சரவண துரை ராஜா தலைமை வகித்தார்.
மாவட்ட பொதுச் செயலாளர் கிரி ஜனகர், தேர்தல் அதிகாரி பாலசுப்பிரமணியன், தேர்தல் பார்வையாளர் ராஜ கண்ணன் முன்னிலை வகித்தனர். வடக்கு ஒன்றிய தலைவராக முனீஸ் குமார், தெற்கு ஒன்றிய தலைவராக கோவிந்தராஜ், மேற்கு ஒன்றிய தலைவராக பிரதாப், திருத்தங்கல் நகர் தலைவராக முருகேசன், சிவகாசி நகர் தலைவராக போஸ் மணிகண்டன் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.