ADDED : மே 06, 2025 05:49 AM

விருதுநகர்: விருதுநகர் தேசபந்து மைதானத்தில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து பா.ஜ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் தலைமை வகித்தார். மதத்தின் பெயரால் நடத்தப்படும் பயங்கரவாதத் தாக்குதல்கள் கண்டனத்திற்குரியது. போருக்கு பதிலாக பொருளாதார அடிப்படையில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
முன்னாள் மாவட்ட தலைவர் ஈஸ்வரன், பார்வையாளர் வெற்றிவேல், செயற்குழு உறுப்பினர் கஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை நகரத் தலைவர் மணிராஜன் செய்தார். கலெக்டர் ஜெயசீலனிடம் மனு அளித்தனர்.
* சிவகாசியில் நடந்த ஆர்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட தலைவர் ராஜா தலைமை வகித்தார். மாநகர தலைவர் போஸ் மணிகண்டன், கவுன்சிலர் குமரி பாஸ்கர், அரசு தொடர்பு பிரிவு தலைவர் பாலசுப்பிரமணி, முன்னாள் ஒன்றிய தலைவர் சிவசெல்வராஜ், ஒன்றிய தலைவர் கோவிந்தராஜ், பூபதி, சிந்து பாரதி கலந்து கொண்டனர். சப் கலெக்டர் பிரியா ரவிச்சந்திரனிடம் மனு கொடுத்தனர்.