/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இன்று விருதுநகருக்கு பா.ஜ., மாநில தலைவர் வருகை
/
இன்று விருதுநகருக்கு பா.ஜ., மாநில தலைவர் வருகை
ADDED : நவ 14, 2025 03:59 AM
விருதுநகர்: விருதுநகருக்கு பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வருகிறார். பொதுக்கூட்டம், வியாபாரிகளுடன் கலந்துரையாடல் உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்கிறார்.
மாலை 5:00 மணிக்கு சாத்துார் டோல்கேட், 5:20 மணிக்கு ஆர்.ஆர்., நகர், 5:40 மணிக்கு சூலக்கரை மேட்டில் வைத்து வரவேற்பு அளிக்கப்படுகிறது. மாலை 6:00 மணிக்கு எம்.ஜி.ஆர்., சிலை முதல் தேசபந்து மைதானத்தில் அமைக்கப்பட்ட பொதுக்கூட்ட மேடை வரை ரோடு ஷோ நடத்தப்படுகிறது. மாலை 6:30 மணிக்கு பொதுக்கூட்டம் நடக்கிறது.
இரவு 7:35 மணிக்கு வி.வி.வி., அரங்கத்தில் வர்த்தகர்கள் சந்திப்பு நடக்கிறது. இரவு 8:00 மணிக்கு பத்திரிகையாளர்களை சந்திக்கிறார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கிழக்கு மாவட்டத் தலைவர் பாண்டுரங்கன் ஒருங்கிணைக்கிறார்.

