/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பட்டாசு, தீப்பெட்டி தொழிலை பா.ஜ., ஆதரிக்கிறது; மாநில பொதுச் செயலாளர் ராம ஸ்ரீநிவாசன் பேச்சு
/
பட்டாசு, தீப்பெட்டி தொழிலை பா.ஜ., ஆதரிக்கிறது; மாநில பொதுச் செயலாளர் ராம ஸ்ரீநிவாசன் பேச்சு
பட்டாசு, தீப்பெட்டி தொழிலை பா.ஜ., ஆதரிக்கிறது; மாநில பொதுச் செயலாளர் ராம ஸ்ரீநிவாசன் பேச்சு
பட்டாசு, தீப்பெட்டி தொழிலை பா.ஜ., ஆதரிக்கிறது; மாநில பொதுச் செயலாளர் ராம ஸ்ரீநிவாசன் பேச்சு
ADDED : நவ 25, 2024 05:54 AM
சிவகாசி : பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்கள் பா.ஜ., வினரை ஆதரிக்கிறார்களா என்பது முக்கியமில்லை. ஆனால் பா.ஜ.., பட்டாசு, தீப்பெட்டி தொழிலை ஆதரிக்கிறது, என பா.ஜ.., மாநில பொதுச் செயலாளர் ராம ஸ்ரீநிவாசன் பேசினார்.
சிவகாசியில் ஹிந்து மக்கள் கட்சி சார்பில் ஹிந்து எழுச்சி மாநாடு நடந்தது. அதன் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமை வகித்தார்.
பா.ஜ., மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் ராம ஸ்ரீநிவாசன் பேசுகையில், தீப்பெட்டி தொழிலின் அடுத்த கட்டமாக பட்டாசு, அச்சுத் தொழில்கள் உருவானது. இன்று ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெறும் அளவுக்கு பட்டாசு தொழில் வளர்ச்சி அடைந்துள்ளது.
தீபாவளியை ஒழித்து விட வேண்டும் என்ற நோக்கில் பட்டாசு தொழிலுக்கு தடை விதிக்க சில தன்னார்வ நிறுவனங்கள் வேலை செய்தன. முதலில் சிவகாசியில் குழந்தை தொழிலாளர்கள் அதிகம் உள்ளதாக பொய்யான தகவல்களை பரப்பினர்.
ஆனால் தமிழகத்தில் அதிக படிப்பறிவு உள்ள மாவட்டமாக, உயர் கல்வி மாணவர்கள் சேர்க்கை உள்ள மாவட்டமாக விருதுநகர் உள்ளது என்பதே உண்மை. தன்னார்வ நிறுவனம் வெளியிட்ட கருத்துக்கு எதிராக நான் சுதேசி இயக்கத்தில் இருந்த போது தொடரப்பட்ட வழக்கில், பொய் தகவல் பரப்பியதற்காக தொண்டு நிறுவன தலைவர் சிறைக்கு சென்றார்.
2014 வரை காங்., ஆட்சியில் சீன பட்டாசுகள் தடை செய்யப்படவில்லை. பிரதமர் மோடி பதவியேற்ற 6 மாதத்தில் சீன பட்டாசுக்கு தடை விதித்தார்.
பட்டாசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் மத்திய அரசு பட்டாசு தொழிலுக்கு ஆதரவாக வாதாடியதின் விளைவாக பசுமை பட்டாசு உருவானது. இதனால் கடந்த ஆண்டு உற்பத்தி செய்த அனைத்து பட்டாசுகளும் விற்பனையாகி உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர், என்றார்.