நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் காமராஜ் பொறியியல் கல்லுாரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்கம், நாட்டு நலப்பணித்திட்டம், தேசிய மாணவர் படை இயக்கம், ரோட்டராக்ட் சங்கம் ஆகியவற்றின் சார்பில் ரத்த தான முகாம் நடந்தது.
விருதுநகர் ஹிந்து நாடார் ஊஞ்சா தனசாமி பரிமளாதேவி மருத்துவஅறக்கட்டளை ரத்த வங்கி, விருதுநகர் அரிமா சங்கம், விருதுநகர் ஜே.சிஐ., எலைட் ஆகியோர் இணைந்து இம்முகாமை நடத்தினர்.
கல்லுாரியின் செயலாளர் தர்மராஜன், துணைத் தலைவர் பாலகிருஷ்ணன், பொருளாளர் ஸ்ரீமுருகன், முதல்வர் செந்தில் முகாமை துவங்கி வைத்தனர். ரத்தததானம் செய்தவர்களுக்கு சான்றுகள் வழங்கப்பட்டன.