நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி: மல்லாங்கிணர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருது பாண்டியர்களின் 224வது ஜெயந்தி விழா, முத்துராமலிங்க தேவர் 118வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, முடியனுார் பி.என்.பி., டிரஸ்ட் சார்பாக 8வது ஆண்டு ரத்த தான முகாம் நடந்தது.
டிரஸ்ட் தலைவர் கே.முத்துக்குமார் தலைமை வகித்தார். செயலாளர் எஸ்.முத்துக்குமார் முன்னிலை வகித்தார். பொருளாளர் முத்து வீரபாண்டி வரவேற்றார். அமைச்சர் தங்கம் தென்னரசு துவக்கி வைத்து, மரக்கன்றுகளை நட்டார். ரத்த தானம் வழங்கியவர்களுக்கு ஹெல்மெட், சான்றிதழ் வழங்கப்பட்டது.

