நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: சாத்துாரில் அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் , உப்பத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து ரத்ததான முகாம் நடந்தது. எம்.ஏ.சி.எஸ். ரவீந்திரன் தலைமை வகித்தார். டாக்டர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார்.
சப்தகிரி பில்டர்ஸ் விஜயராகவன் ரத்ததான முகாமை துவக்கினார். சண்முகக்கனி வாழ்த்தினார். ஐயப்ப பக்தர்கள் மக்கள் உள்ளிட்ட 71 பேர் ரத்த தானம் வழங்கினர். சாத்துார் கிளை அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் தலைவர் விஸ்வநாதன் நன்றி கூறினார்.

