ADDED : ஜன 08, 2026 06:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: ஜன.8--: -: விருதுநகர் ஆத்துப் பாலம் அருகே நிறைவாழ்வு நகர் சர்ச் எதிரே நீர்வரத்து ஓடையில் நேற்று இரவு 7:00 மணிக்கு அடையாளம் தெரியாத ஆண் உடல் எரிந்த நிலையில் கிடந்தது.
பஜார் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகப்படும் போலீசார் அவரது பெயர், விபரம் குறித்து விசாரிக்கின்றனர்.

