/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நவ. ல் புத்தகத் திருவிழா; மாணவர் உண்டியல் வழங்க எதிர்பார்ப்பு
/
நவ. ல் புத்தகத் திருவிழா; மாணவர் உண்டியல் வழங்க எதிர்பார்ப்பு
நவ. ல் புத்தகத் திருவிழா; மாணவர் உண்டியல் வழங்க எதிர்பார்ப்பு
நவ. ல் புத்தகத் திருவிழா; மாணவர் உண்டியல் வழங்க எதிர்பார்ப்பு
ADDED : அக் 25, 2025 03:51 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் நவம்பர் மாதம் புத்தகத் திருவிழா நடக்கிறது. இந்நிலையில் கடந்தாண்டு வழங்கியது போன்று மாணவர்களுக்கு புத்தக உண்டியல் வழங்கினால் மாணவர்கள் புத்தகங்கள் வாங்குவது அதிகரிக்கும்.
மாவட்டத்தில் 2024 புத்தகத் திருவிழாவில் 110 அரங்குகள் அமைக்கப்பட்டு, 1 லட்சத்து 7 ஆயிரத்து 574 பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். இதில் புத்தகங்களை வாங்குவதற்காக 5592 மாணவர்களுக்கு புத்தக உண்டியல்கள் வழங்கப்பட்டன. கண்காட்சிக்கு 20 நாட்கள் முன்பே வழங்கப்பட்டதால் மாணவர்கள் அதில் பணத்தை சேமித்து அந்த உண்டியலோடு கடை அரங்குகளில் வந்து புத்தகம் வாங்கினால் 20 சதவீதம் தள்ளுபடி வேறு வழங்கினர்.
இதில் 5592 மாணவர்களும் பயன்பெற்றனர். பெரும்பாலும் இது பின்தங்கிய மாவட்டம் என்பதால் ஏழை மாணவர்கள் அதிகம் உள்ளனர். ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் இந்த புத்தகத்திருவிழா போன்ற கண்காட்சிகள் தான் அவர்கள் புத்தகம் வாங்க சிறந்த இடம். எனவே அவர்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு முன்கூட்டியே புத்தக உண்டியல்கள் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்தாண்டு புத்தக உண்டியல் வழங்கியதால் வழக்கத்தை விட கூடுதல் புத்தகங்கள் விற்றது. இந்தாண்டும் மாணவர்கள் புத்தகங்கள் வாங்குவதை அதிகரிக்க இது முக்கிய நடவடிக்கையாக இருக்கும்.

