ADDED : அக் 25, 2025 03:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகரில் தமிழ்நாடு, புதுச்சேரி கட்டட பொறியாளர்கள் கூட்டமைப்பின் விருதுநகர் மாவட்ட குழு கூட்டம் நடந்தது. தென் மண்டல தலைவர் கண்ணன் தலைமை வகித்து பேசுகையில்,
தேர்தல் அறிக்கையில் அறிவித்த படி, கட்டட பொறியாளர்களுக்கு பாதுகாப்பு கவுன்சில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓரிடத்தில் பதிவு செய்த கட்டடப் பொறியாளர்கள், வெவ்வேறு ஊர்களில் பணிபுரிய அனுமதி வழங்க வேண்டும். பொறியாளர்களின் பதிவை ஆயுட்காலம் வரை நீட்டிக்க வேண்டும். பொறியாளர்கள் மட்டுமே கட்டட வரைபடம் வரைந்து அனுமதி பெறும் வகையில் வழிவகை செய்ய வேண்டும் என்றார். விருதுநகர், சாத்துார் நகர் தலைவர் இசக்கி குமார், உள்பட பலர் பங்கேற்ற னர்.

