ADDED : செப் 22, 2025 03:23 AM
சிவகாசி : சிவகாசி அருகே விஸ்வநத்தத்தில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம், கந்தகப் பூக்கள் இலக்கிய அமைப்பு சார்பில் நுால்கள் விமர்சனக் கூட்டம் நடந்தது.
தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் தலைவர் முத்து பாரதி, பொருளாளர் நித்யா கணேசன், கவிஞர் பால்ராஜ் தலைமை வகித்தனர். அன்பு ஆரோக்கியம் வரவேற்றார். முதல் அமர்வில் அதிர்வு பறை இசைக் குழு எழுத்தாளர் சரவணன் தொகுத்த செம்புல பெயல் நீர் கவிதை தொகுப்பின் விமர்சனம் நடந்தது. கவிஞர்கள் ராஜேஷ்குமார், ஆதினி, ஷாலினி, கோகிலா, புவனா கதிர், டோனி புஷ்பா, ஆதீஸ்வரன், ஜெயரக்சனா, ராஜேஸ் கண்ணன், ஷப்ரின் ரோஜா விமர்சனம் செய்தனர். இரண்டாம் அமர்வில் கரிசல் இலக்கிய கழகம் செயற்குழு உறுப்பினர் எழுத்தாளர் காமராஜ் தொகுத்த கண்ணகி தெரு கடைசி வீடு சிறுகதை தொகுப்பின் விமர்சனம் நடந்தது.
தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் துணை தலைவர் ஜெயக்குமார், நிர்வாகிகள் குமார், பேச்சிமுத்து, மகேஷ் கண்ணன் விமர்சனம் செய்தனர். எழுத்தாளர்கள் காமராஜ் தரவணக்கம் ஏற்புரை வழங்கினர்.
தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் மாநகர செயலாளர் முத்து நன்றி கூறினார்.