நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் பென்னிங்டன் நுாலகத்தின் 150வது ஆண்டு விழாவினை முன்னிட்டு தேசிய நுாலக வார விழா நடந்தது.
மூத்த வழக்கறிஞர் ராஜகோபால் தலைமை வகித்தார். கமிட்டி துணை தலைவர் முத்துபட்டர் முன்னிலை வகித்தார். வழக்கறிஞர் ரமேஷ் வரவேற்றார். சென்னை மதராஸ் நூலக சங்க தலைவர் நித்தியானந்தம், பேராசிரியர் கோதண்டராமன், மைலாப்பூர் சாஸ்திரி நுாலக முன்னாள் நுாலகர் லலிதா, பொருளாளர் ராஜன் பாபு பேசினர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ராஜாராம் தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை பென்னிங்டன் நுாலக நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

