sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

துப்புரவு பணியாளர்களுக்கு சம்பளம் வழங்காததால்  சிரமம்; நிதி பற்றாக்குறையால் பரிதவிப்பில் அரசு பள்ளிகள்

/

துப்புரவு பணியாளர்களுக்கு சம்பளம் வழங்காததால்  சிரமம்; நிதி பற்றாக்குறையால் பரிதவிப்பில் அரசு பள்ளிகள்

துப்புரவு பணியாளர்களுக்கு சம்பளம் வழங்காததால்  சிரமம்; நிதி பற்றாக்குறையால் பரிதவிப்பில் அரசு பள்ளிகள்

துப்புரவு பணியாளர்களுக்கு சம்பளம் வழங்காததால்  சிரமம்; நிதி பற்றாக்குறையால் பரிதவிப்பில் அரசு பள்ளிகள்


UPDATED : நவ 17, 2025 02:56 AM

ADDED : நவ 17, 2025 02:03 AM

Google News

UPDATED : நவ 17, 2025 02:56 AM ADDED : நவ 17, 2025 02:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்களை மற்ற பணிகளில் ஈடுபடுத்தி விடக்கூடாது என்பதற்காக பள்ளி மேலாண்மை குழு சார்பாக அனைத்து பள்ளிகளிலும், 6 ஆண்டுகளுக்கு முன் துாய்மை பணிகளை செய்ய துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

மாணவர்களின் எண்ணிக்கையை பொறுத்து மாதம் ரூ.ஆயிரம் முதல் ஆயிரத்து 500 வரை சம்பளமாக வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பள்ளிக்கும் பராமரிப்பு செலவுக்கு ரூ.300 தனியாக வழங்கப்படுகிறது. முழு சுகாதார இயக்கத்தின் மூலம் சம்பளம் வழங்கப்பட்டது.

அதற்கு போதிய நிதி வரவில்லை. பொது நிதியில் இருந்து சம்பளம் வழங்க முடிவு செய்யப்பட்டது. பொது நிதியில் இருந்தும் உடனடியாக சம்பளம் போட முடியாது. கலெக்டர் அனுமதி வழங்கினாலும், எதிர்பாராத செலவுகளுக்கு பொது நிதியை ஒதுக்கி வைத்திருக்க வேண்டும். உதாரணமாக ஏதாவது ஒரு இடத்தில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது என்றால், அதனை உடனே சீரமைக்க வேண்டும். அந்தந்த ஊராட்சியில் பணம் இருப்பு இருந்தால் எடுத்துக் கொள்ளலாம்.

அதிலிருந்து சம்பளம் போடுவது என்பது எளிதான காரியம் இல்லை. இந்நிலையில் துப்புரவு பணியாளர்களின் நிலைமையை கருத்தில் கொண்டு 2 மாதங்களுக்கு சம்பளம் வழங்க கலெக்டர் அனுமதி வழங்கினார். பொது நிதியில் போதிய நிதி இல்லாமல் பல ஒன்றிய அலுவலகங்களில் அதிகாரிகள் தவிக்கின்றனர்.

குறைந்த சம்பளத்தில் கஷ்ட ஜீவனம் நடத்தும் துப்புரவு பணியாளர்கள் இந்த சம்பளத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தீபாவளி சமயத்தில் அவர்களது நிலைமை படு மோசமாக இருந்தது. அப்போது ஆசிரியர்கள் பலர் அவர்களுக்கு உதவி செய்தனர். இருந்தாலும் தொடர்ந்து செய்ய முடியாது என்பதால் துப்புரவு பணியாளர்கள் தவியாய் தவித்து வருகின்றனர்.

அவர்களது நிலைமையை கருத்தில் கொண்டு இதுவரை வழங்கப்படாத 6 மாத சம்பளத்தை உடனடியாக வழங்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்ப்புடன் உள்ளனர்.






      Dinamalar
      Follow us