/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வேன் - டூவீலர் மோதல்: 2 பேர் பலி
/
வேன் - டூவீலர் மோதல்: 2 பேர் பலி
ADDED : நவ 17, 2025 01:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சுழி: விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே மில் வேன் டூவீலர் மீது மோதியதில் பெண் உட்பட இருவர் பலியாயினர்.
திருச்சுழி அருகே குள்ளம்பட்டியைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி 55. இவருக்கு நேற்று இரவு 8:30 மணியளவில் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் பேரன் நாகேந்திரனை, 25, அழைத்துக்கொண்டு டூவீலரில் கல்லூரணியில் உள்ள மருத்துவமனைக்கு சென்றார்.
ஊருக்கு அருகே எதிரே வந்த தனியார் மில் வேன் டூவீலர் மீது மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர். எம்.ரெட்டியபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

