ADDED : நவ 19, 2024 06:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்: ராஜபாளையம் கல்யாண சுந்தரனார் தெருவை சேர்ந்தவர் குருசாமி. வெளிநாட்டில் பணிபுரிகிறார். இவரது மகன் சக்தி மகேஸ்வரன் 16. சிவகாசியில் வசிக்கும் தாய் மாமா சரவணகுமார் திருமணத்திற்கு ராஜபாளையம் வந்திருந்தார். மேற்கு தொடர்ச்சி மலையடிவார ராக்காச்சி அம்மன் கோயில் மீன் கொத்தி பாறை அருவிக்கு மருமகனை குளிக்க சரவணகுமார் அழைத்துச் சென்றுள்ளார்.
ஆழமான பகுதியில் சக்தி மகேஸ்வரன் கால் வழுக்கி விழுந்தார். இருவருக்கும் நீச்சல் தெரியாது. எனவே உடனடியாக மீட்க முடியவில்லை. ராஜபாளையம் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் ஸ்ரீனிவாசன் தலைமையில் பாறையின் நடுவே ஆழத்தில் சிக்கி இருந்த மகேஸ்வரனை உடலை மீட்டனர்.