ADDED : செப் 18, 2026 04:31 PM
அ நிறம் | அளவு
அருப்புக்கோட்டை, செப். 19-
அருப்புக்கோட்டை வீராச்சாமி தெருவை சேர்ந்தவர் செல்வகுமார், 40, இவரது மகன் ஜெகன், 5, அருப்புக்கோட்டையில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு வீட்டுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்தான். அப்போது அருகில் உள்ள சந்தில் கீழே கிடந்த மின் வயரை மிதித்ததில் மின்சாரம் தாக்கி மயக்கம் அடைந்தான். அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை அவனை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக கூறினர்.
அருப்புக்கோட்டை டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
