UPDATED : அக் 31, 2026 11:13 PM
ADDED : அக் 31, 2026 08:29 PM

அ நிறம் | அளவு
நரிக்குடி: விருதுநகர் மாவட்டம் நரிக்குடி பள்ளப்பட்டியைச் சேர்ந்த அஜித்குமார், மனைவி அனுசியா.
இவர்களது மகன் வெற்றிக்காளை 4. மண் சுவர், ஓட்டு வீட்டில் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் சில தினங்களுக்கு முன் பெய்த கனமழை காரணமாக மண் சுவர் தாக்குப் பிடிக்க முடியாமல் இன்று (அக்.,31) மதியம் இடிந்து விழுந்தது. அப்போது, வெற்றிக் காளை மீது ஓடு விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். திருச்சுழி தாசில்தார் சோனையன், ஆர். ஐ ., துரைமுருகன் பார்வையிட்டனர் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
