ADDED : செப் 01, 2026 07:02 PM
அ நிறம் | அளவு
சிவகாசி, செப்.
2 -
சிவகாசி சசிநகரில் வசித்து வரும் தம்பதியினரின் 4 வயது மகன் நேற்று முன்தினம் இரவு பித்தளைப் பானைக்குள் கால்களை விட்டு விளையாடும்போது இரு கால்களும் பானைக்குள் சிக்கிக் கொண்டு வெளியே எடுக்க முடியாமல் தவித்தான். இதனைத் தொடர்ந்து பெற்றோர் சிறுவனை பானையோடு டூவீலரில் ஏற்றி சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கு வந்தனர். தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு பானைக்குள் சிக்கியிருந்த சிறுவனின் கால்களை லாவகமாக மீட்டனர். வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது பானையின் மீது ஏறி உள்ளே அமர முயலும் போது சிறுவனின் கால்கள் பானைக்குள் சிக்கிக்கொண்டதாக பெற்றோர் தெரிவித்தனர்.
