/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வேறு நபருடன் பேசியதால் நர்சிங் மாணவி கொலை காதலன் ஆத்திரம்
/
வேறு நபருடன் பேசியதால் நர்சிங் மாணவி கொலை காதலன் ஆத்திரம்
வேறு நபருடன் பேசியதால் நர்சிங் மாணவி கொலை காதலன் ஆத்திரம்
வேறு நபருடன் பேசியதால் நர்சிங் மாணவி கொலை காதலன் ஆத்திரம்
ADDED : செப் 29, 2025 06:51 AM
மதுரை : மதுரை ஒத்தக்கடை அருகே நர்சிங் மாணவியை கல்லால் அடித்து காதலன் கொலை செய்தார்.
ஊமச்சிகுளம் சின்ன மாங்குளம் ஜெயசூர்யா, 19. பள்ளிப் படிப்பு முடித்து வீட்டில் இருந்தார்.
இவரது தாய்மாமன் மகளான சிவகாசியை சேர்ந்த 17 வயது மாணவி, அங்குள்ள நர்சிங் கல்லுாரியில் படித்து வந்தார்.
இருவரும் காதலித்த நிலையில், வேலைக்கு செல்லாத காரணத்தால் ஜெயசூர்யாவிடம் பேசுவதை மாணவி தவிர்த்ததோடு, வேறு நபருடன் அலைபேசியில் பேசி வந்தார். இதனால் ஆத்திரமடைந்த ஜெயசூர்யா, பலமுறை எச்சரித்தும் அவர் கேட்கவில்லை.
இந்நிலையில், மாணவியை அழகர்கோவிலுக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டார். முதலில் வர மறுத்தவர், பின்னர் சம்மதித்தார்.
சிவகாசியில் இருந்து நேற்று மாட்டுத்தாவணி வந்தவரை டூவீலரில் அழைத்து சென்ற ஜெயசூர்யா, அழகர்கோவில் செல்லாமல் ஒத்தக்கடை ராஜாக்கூர் கண்மாய்க்கு அழைத்து சென்றார்.
வேறு நபரிடம் பேசக்கூடாது என அங்கு மீண்டும் பிரச்னை செய்த நிலையில், அங்கிருந்த கல்லால் மாணவியை தாக்கினார்.
இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். பின் போலீசில் ஜெயசூர்யா சரணடைந்தார். ஒத்தக்கடை போலீசார் விசாரிக்கின்றனர்.