/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அமைச்சர் பொன்முடிக்கு பிராமண சமாஜம் கண்டனம்
/
அமைச்சர் பொன்முடிக்கு பிராமண சமாஜம் கண்டனம்
ADDED : ஏப் 14, 2025 04:51 AM
அருப்புக்கோட்டை: அமைச்சர் பொன்முடிக்கு அருப்புக்கோட்டை பிராமண சமாஜம் சார்பாக கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டை திருச்சுழி ரோட்டில் அருப்புக்கோட்டை பிராமண சமாஜம் சார்பாக பொதுக்குழு கூட்டம் நடந்தது. தலைவர் மணி தலைமை வகித்தார். கூட்டத்தில் 2024-25 பஞ்சாங்கம் வழங்கப்பட்டது. புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடந்தது. சங்கத்தின் எதிர்கால வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டது.
முக்கிய தீர்மானமாக தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி 2 நாட்களுக்கு முன்பு, பெண்கள் மற்றும் சைவ, வைணவ மதங்களை இழிவுபடுத்தி பேசியதை கண்டித்தும், இது போன்று முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் தாங்கள் எடுத்த சத்திய பிரமாணத்தின் படி நடந்து கொள்ள வேண்டும் எனவும், அமைச்சர் மீது தமிழ்நாடு காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. செயலாளர் மீனாட்சி சுந்தரேஸ்வரம் நன்றி கூறினார்.

