UPDATED : அக் 06, 2026 12:00 AM
ADDED : அக் 05, 2026 07:36 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவமனையில் இளஞ்சிவப்பு அக்டோபர் மாதத்தை முன்னிட்டு மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாமை டீன் அமுதா ராணி தலைமை வகித்து துவக்கி வைத்தார்.
இதில் பொறுப்பு மருத்துவமனை கண்காணிப்பாளர் அரவிந்த்பாபு, துணை கண்காணிப்பாளர் அருண், ஆர்.எம்.ஓ., வைஷ்ணவி, அறுவை சிகிச்சைத்துறை தலைவர் லட்சுமி நாராயணன் உள்பட மருத்துவர்கள், செவிலியர்கள் பலர் பங்கேற்றனர்.
இம்முகாமில் மார்பக பரிசோதனை, மேமோகிராம், அல்ட்ராசவுண்ட் பரிசோதனை ஆகியவை செய்யப்படுகிறது. முகாம் அக்.31 வரை பெண்களுக்கான வெளிநோயாளி பிரிவில் நடக்கிறது.
